சிங்கப் பெண் என்றால் இதை செய்திருக்க வேண்டும்! வனிதாவை மீண்டும் நம்பி ஏமாந்தேன் என கருத்து தெரிவித்த முன்னாள் கணவர் ராபர்ட்…

சமீப காலமாக தமிழகத்தில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக பேசப்படும் விவாதங்களில் ஒன்று நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம். நடிகை வனிதா மற்றும் அனிமேஷன் இயக்குநர் பீட்டர்பால் ஆகிய இருவரும் கடந்த ஜூன் 27ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். வனிதாவின் மூன்றாம் திருமணம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

திருமணம் முடிந்த அடுத்த நாளே பீட்டர் பால் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். தனது கணவர் பீட்டர்பால் தனக்கு விவாகரத்து அளிக்காமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது வனிதாவின் முன்னாள் கணவர் ராபர்ட் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் பேசிய அவர், “வனிதா உண்மையில் சிங்கப்பெண் என்றால், அவர் பீட்டரிடம், போய் உன் குடும்பத்தை பார் என்று சொல்லியிருக்க வேண்டும். அதே போல் பீட்டர் பாலுக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் “உண்மையாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்”. குக்கு வித் கோமாளியில் வனிதாவை பார்ததும் பரவாயில்லை வனிதா மாறிடிச்சினு நெனச்சேன். ஆனால், இதை எல்லாம் பார்க்கும் போது….. என சலிப்புடன் கூறினார் ராபர்ட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!