சிங்கப்பூரில் நடைப்பாதையில் தமிழ் பெண் ஒருவர் செய்த காரியம்! சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

சிங்கப்பூரில் இருக்கும் தன்னுடைய மகனை பார்க்க சென்ற தாய் மிளகாய், மல்லி, மஞ்சள் என மசாலா பொருள்களை நடைபாதையில் காயவைத்து அதற்கு பாதுகாவலராக பக்கத்திலேயே படுத்து உறங்கி புகைப்படம் வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டுள்ளது.

இது குறித்து தனா டெல்டாகாரன் என்பவர் பேஸ்புக்கில் எழுதியுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “இந்தியாவிலிருந்து யாரோ ஒரு நண்பர் சிங்கப்பூருக்கு அம்மாவை அழைத்து வந்திருக்கிறார் இங்குள்ள விதிமுறைகள் சட்டதிட்டங்கள் பற்றி கூறாமல் உள்ளார் போல. அந்தம்மா மிளகாய், மல்லி, மஞ்சள் என மசாலா பொருள்களை நடைபாதையில் காயவைத்து அதற்கு பாதுகாவலராக பக்கத்திலேயே படுத்து உறங்கியும் உள்ளார். உள்ளூர்வாசிகள் பேஸ்புக்கில் அதை பதிவிட்டுள்ளனர்.

பார்க்க கொஞ்சம் மனது கஷ்டப்பட்டது. பெற்றோரை வரவழைக்கும் போது இது போன்ற செயல்களை தவிர்க்க அறிவுறுத்துங்கள். பணத்தைக்கொடுத்து பொருளை வாங்கித்திண்ணும் நெட்டிசன்களுக்கு, வயலில் விளைந்ததை பிள்ளைகளுக்காக பொட்டலம் கட்டி வானூர்தியில் கொண்டு வந்து,

அதை வெயில் உலர்த்தி தேக்காவில் உள்ள மில்லில் அரைத்துக்கொண்டு வந்து பிள்ளைகளுக்கு சமைக்க எண்ணிய தாயன்பு ஏளனம் செய்து பதிவிடும் உயர்தட்டு கணிணி உலக நண்பர்களுக்கு புரியாது. உழவை அறியாத பூமி, அறியாமையை ஏளனம் செய்வது வேதனை” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *