பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஈழத்து பெண் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். இவர் பெயரை நிகழ்ச்சியின் போது சொல்லாத ரசிகனே இல்லை. தற்போது அவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார்.

அந்த படத்தை தொடர்ந்து, லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க், ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப். ஆம் நடிகை லாஸ்லியா இதுவரை மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பிக் பாஸ் புகழ் லாஸ்லியா இப்போது ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கிறார் என்று கூறலாம். இப்படங்கள் மூலமாக தான் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக பிரதிபலிக்க இருக்கிறார் நடிகை லாஸ்லியா.
லாஸ்லியா அவ்வப்போது தனது புகைப்படத்தினை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டும் வருகின்றார். உலகெங்கும் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதால் சமீபத்தில் படப்பிடிப்பு வைக்கப்பட்டதால் வீடுகளில் பொழுதைக் கழித்து வந்தார். தற்போது அவ்வப்போது படப்பிடிப்பிற்கு சென்று வரும் லொஸ்லியா, கடற்கரையில் அமர்ந்திருக்கும் போட்டோஷுட் நடத்தியுள்ளார். இவர் சிகப்பு நிற உடையில் கொள்ளை அழகில் காட்சியளிக்கும் புகைப்படங்கள் இதோ…