சாய் பல்லவி வெளியிட்ட பள்ளிப்பருவப் புகைப்படம்… பலரும் பார்த்திடாத சிறு வயது புகைப்படம், இதோ…

தென்னிந்திய திரைப்படங்களில் மிகவும் பிரபலமாக வளம் வருபவர் நடிகை சாய் பல்லவி. விஜய் தொலைக்காட்சி நடத்திய உங்களில் யார் பிரபு தேவா நிகழ்ச்சியில் பங்கேற்றார். 2015 ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான நிவின் பாலி நடித்த பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்த ஒரு படம் இவரை தென்னிந்திய முழுவதும் பிரபலப்படுத்தியது.

பின்னர் இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் வெளியான கலி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். வருண் தேச்சுடன் இணைந்து பானுமதி என்ற கதாபாத்திரத்தில் காதல் படமான பிடாவில் நடித்ததன் மூலம் 2017 இல் தெலுங்கு திரைப்பட உலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து மிடில் கிளாஸ் அப்பாயி மெகா ஹிட்.

ஆனால், தமிழ் தான் சாய் பல்லவிக்கு எதிர்ப்பார்த்த வெற்றியை தரவில்லை, தியா, என் ஜி கே, மாரி 2 என தொடர் தோல்விகள் தான். சரி இது ஒரு புறம் இருக்க தற்போது சாய் பல்லவி பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்களேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!