வனமகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சாயிஷா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்த நடிகை சாயிஷா, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். தமிழில் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்தார் சாயிஷா. அப்போது இருவருக்கும் இடையே காதல் பற்றிக்கொள்ள கடந்த ஆண்டு மார்ச் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மீண்டும் இணைந்து டெடி படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை சாயிஷா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு சாயிஷாவும் ஆர்யாவும் நெருக்கமாக உள்ள க்யூட் ரொமான்டிக் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லாக்டவுன் நேரத்தில் வீட்டுக்குள்ளேயே இருந்து போரடித்த போன சாயிஷாவும் ஆர்யாவும் மொட்டை மாடியில் குடும்பத்துடன் அரட்டை அடித்தனர்.
அவர்கள் ஒருவரை ஒரு அணைத்தப்படி கலகலப்பாக சிரிக்கும் போட்டோவையும் சாயிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இந்த ஒரு போட்டோவே சினிமாத்துறையில் அவர்கள் சிறந்த ஜோடி என்பதை காட்டுவதாக உள்ளது. வாழ்க்கையில் பல மறக்க முடியாத நினைவுகளை பெற பல இடங்களுக்கு பயணம் செய்வது சிறந்தது என்பதை உணர்ந்த ஆர்யா சாயீஷா ஜோடி முதல் முறையாக கடல் டைவிங்கில் பங்கேற்றது. மாலத்தீவுக்கு சென்றபோது எடுத்த போட்டோவும் செம வைலரலானது.