இணையத்தை கலக்கி வரும் 95 வயது மூதாட்டி. சாதிக்க வயது ஒரு தடையே இல்லை என்பார்கள். அதை உண்மைதான் எனச் சொல்லும் அளவுக்கு பாட்டி ஒருவர் ஒரு செயல் செய்து இருக்கிறார். குறித்த அந்தக் காட்சியில் பாட்டி தள்ளாடி, தள்ளாடி ஒரு பிரமாண்ட கிணற்றின் படிக்கட்டுகளில் இறங்குகிறார். தொடந்து அவர் அந்த கிணற்றின் ஒருமுனையில் இருந்து அடுத்த முனைக்கு அசராமல் நீச்சலடித்துச் செல்கிறார். இதைப் பார்க்கவே நமக்கு மெய் சிலிர்த்துப் போகிறது. இந்த பாட்டிக்கு இப்போது 95 வயதாம். பிட்சாவும், பர்கரும் சாப்பிட்டு இந்த வயது பிள்ளைகள் உடல்ரீதியிலான முயற்சிகளில் கடும் சோம்பேறியாக இருக்கும் நிலையில் 95 வயது பாட்டியின் அசாத்திய சாதனை அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது. இதோ அந்த வீடியோ..பாருங்கள்.
சாதிக்க வயது தடையே இல்லை!! 95 வயது பாட்டியின் அசாத்திய சாதனை! காண்போரை மெய்சிலிர்க்க வைத்த காணொளி
