பிக் பாஸ் 4 நிகழ்ச்சி இந்த ஆண்டு நடக்குமா, நடக்காதா? என்று பேசப்பட்ட நிலையில் ப்ரொமோ வீடியோ வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்தது. கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள 4வது பிக்பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி ஒளிபரப்பாக உள்ளதான தகவல் வெளியாகி வருகின்றது. இந்த மாதம் 20ம் தேதி அதற்கான ஷூட்டிங் பணிகள் நடைபெறும் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்நிலையிவ் தமிழில் 4வது சீசனில் கலந்துகொள்ள போகும் ஒரு காமெடி பிரபலம் குறித்த தகவல் கசிந்துள்ளது. விஜய் டிவியில் கடந்தாண்டு கலக்கப்போவது யாரு மற்றும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தன் திறமையை வெளிப்படுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்றார் நடிகர் அமுதவாணன். அதனை தொடர்ந்து கடந்த பிக் பாஸ் சீசனில் அவர் கலந்து கொள்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், போன சீசனில் மிஸ் ஆனா அமுதவாணன், இந்த சீசனில் விட்ட இடத்தை பிடிப்பார் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் அது பற்றிய உறுதியான அறிவிப்பு ஏதும் வெளிவரவில்லை. அவர் வருவது உறுதி என்றால் கடந்த சீசனில் கலந்து கொண்ட சாண்டியின் இடத்தினை இவர் நிரப்புவார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.