சற்று முன்- S.P.B-யின் குடும்பத்தினருடன் ஆலோசனை! குவிக்கப்படும் போலிசார்: வெளியான அ திர்ச் சி தகவல்

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் குடும்பத்தினருடன் மருத்துவர்கள் குழு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை நேற்று இரவு முதல் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து தற்போது, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குறித்து மருத்துவர்களுடன் எஸ்பிபி சரண் மற்றும் குடும்பத்தினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.பி.பியின் மகள் பல்லவி பாலசுப்பிரமணியம் MGM மருத்துவமனைக்கு வந்துள்ளார். மருத்துவமனை இப்போது காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மருத்துவமனை வளாகம் உள்ளேயும், வெளியிலும் ஆயுதப்படை காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இளையராஜா, பாரதிராஜா போன்று திரைத்துறையில் இருந்து பல பிரபலங்கள் மருத்துவமனைக்கு வர உள்ளதாக கூறப்பட்டது. இதில் சற்று முன் பாராதி ராஜா மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரைத் தொடர்ந்து இளையராஜ வரவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக MGM மருத்துவமனை வெளியே நிறுத்தப்பட்டிருந்த காவலர்கள் என்ணிக்கையும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் காவல் ஆணையர் அருண் எம்ஜிஎம் மருத்துவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாக தகவல்

Leave a Reply

Your email address will not be published.