நடிகரும் எம்பியுமான ஜேகே ரித்தீஷ் திடீரென மரணமடைந்துள்ளார். .
ராமநாதபுரத்தில் பூர்வீகமாகக் கொண்டவர் ஜேகே ரித்தீஷ். கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக ராமநாதபுரத்தில் போட்டுவிட்டு எம்பி ஆனார். முக அழகிரியின் தீவிர ஆதரவாளரான அவர் கட்சியில் ஓரம் கட்டப்பட்ட பிறகு அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து அதிமுகவில் செயல்பட்டு வந்த ரித்தீஸ் ராமநாதபுரத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் நயினார் நாகேந்திரன் க்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ராமநாதபுரம் சென்றிருந்தார்.
அங்கு உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்த போது திடீரென ரித்தீஷ்க்கு
நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் வருவதற்குள் ரித்தீஸ் வீட்டிலேயே காலமாகியுள்ளார். 44 வயது ஆனது ரித்தீஷ் காலம் ஆகி இருப்பது தமிழக திரையுலகம் மற்றும் அரசியல் உலகை அதிரவைத்துள்ளது.