சின்மயி டப்பிங் யூனியன் தன் மீது வைத்த குற்றச்சாட்டை ஆதாரத்துடன் மறுத்துள்ளார். பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த குற்றச்சாட்டுக்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்திருந்தார். சின்மயிக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
Here is the formal letter from the dubbing union saying I am no longer a member.
I *have* paid the lifetime membership fee on 11 February 2016. pic.twitter.com/kr2Tprbz8m— Chinmayi Sripaada (@Chinmayi) November 24, 2018
அவர் சமீபத்தில் டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டார். வைரமுத்து விவகாரம் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விளக்கமளித்த தமிழ்நாடு டப்பிங் யூனியன் செல்வராஜ், சின்மயி வருடா வருடம் யூனியன் உறுப்பினர்கள் யுனியனுக்கு செலுத்த வேண்டிய சந்தாவை இரண்டு வருஷமா கட்ட தவறியது.
And there are 16 cases against the Dubbing Union. They keep liars and more liars to drum to their tunes else they’d also be kicked out of work. Pathetic. pic.twitter.com/HUa5H2IIh6
— Chinmayi Sripaada (@Chinmayi) November 24, 2018
அதுமட்டுமில்லாமல், அவர் யூடிப் சேனல் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் ‘தமிழ் நாடு டப்பிங் யூனியலில் கிட்டத்தட்ட 15 புகார்கள் விசாரிக்காமல் நிலுவையில் உள்ளது’ என்று யூனியன் நிர்வாகத்தை எதிர்த்துப் பேசியுள்ளார். இதுகுறித்து விளக்கம் கேட்டும் அவர் பதிலளிக்கவில்லை அதனால் தான் அவர் நீக்கப்பட்டுள்ளார் என கூறினார்.
இந்நிலையில் சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் 2016 ரிலே நான் ஆயுட்கால கட்டணத்தை செலுத்திவிட்டேன். டப்பிங் யூனியலில் கிட்டத்தட்ட 15 புகார்கள் விசாரிக்காமல் நிலுவையில் உள்ளது என கூறினேனா? 15 இல்ல 16 புகார்கள் இருக்கிறது. அதற்கான ஆதாரம் என்று எஃப்.பை.ஆர் காப்பியை சின்மயி வெளியிட்டுள்ளார். இதற்கு ராதாரவியோ அல்லது டப்பிங் யூனியனோ என்ன பதிலளிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
And there are 16 cases against the Dubbing Union. They keep liars and more liars to drum to their tunes else they’d also be kicked out of work. Pathetic. pic.twitter.com/HUa5H2IIh6
— Chinmayi Sripaada (@Chinmayi) November 24, 2018