நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் சுந்தர், பல இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்து, ஆபாச வீடியோ எடுத்து எடுத்து மிரட்டி வந்துள்ளார். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர், அந்த இளைஞரை கைது செய்தனர். பெண்களை ஏமாற்றுதல், பாலியல் அத்துமீறல்கள், மானப்பங்கபடுத்துதல் ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிந்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவன் செல்போனில் அழிக்கப்பட்ட வீடியோக்களை திரும்ப பெற்று விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.
பொள்ளாச்சி, சென்னை,தற்போது நாகை என நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் பாலியல் குற்றங்கள் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது . மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்