சினேகாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரசன்னா! வீட்டில் நடந்த கொண்டாட்டம்..! குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சினேகா. இவர் கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அது மட்டும் இல்லாமல் பிரசன்னா மற்றும் சினோகா ஜோடி இருவரும் சேர்ந்து இன்றும் விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகின்றனர். சினேகா பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

திருமணத்திற்குப் பின்பு திரையுலகை விட்டு ஒதுங்கிய இவர் முதல் குழந்தை பிரசன்னா விஹான் பிறந்த பின், வேலைக்காரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். பின்னர் குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அதையடுத்து கடந்த ஜனவரி 24 ஆம் தேதி சினேகா-பிரசன்னா ஜோடிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.

சினேகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று சினேகா தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக நடிகரும் இவரது கணவருமான பிரசன்னா வீட்டை அலங்கரித்து, பிரமாதமான கேக்கையும் ரெடி செய்து, சினேகாவிற்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். குடும்பத்துடன் இவர்கள் சினேகாவின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் தனது கணவருக்கு நன்றி தெரிவித்த சினேகா எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.