விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சியாக மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வந்தவர் ஜூலி. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் ஓவியாவிற்கும் இடையில் பல சர்ச்சைகள் நடந்தன, இதனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சம்பாதித்த நல்ல பெயரை, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜூலி இழந்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன்பின் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த ஜூலி சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த லாக்டவுனில் மற்ற நடிகைகளை போல ஜூலியும் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்கள் ஈர்த்து வருகிறார் ஜூலி. அதிலும் சமீபத்தில் மாடர்ன் உடையில் இவர் நடத்திய போட்டோ ஷூட் பலரும் வாயடைத்து போனார்கள்.
இந்நிலையில் ஜூலியின் பிளாக் அண்ட் கோல்ட் போட்டோ ஷூட் இப்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பிடிஎஸ் வீடியோவில், ஜூலி முழுமையாக கருப்பு மற்றும் தங்க நிறங்களை உடல் முழுவதும் பூசிக்கொண்டு போட்டோ ஷுட் நடத்தி இருக்கிறார். அது தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
— மரியஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) September 14, 2020