பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கடந்த திங்கள்கிழமை சரவணன் எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி வெளியேற்றப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரவணன் பெண்கள் குறித்து தவறாக பேசியதே இதற்குக் காரணம் என்று பிக்பாஸ் குற்றச்சாட்டி வைத்து வெளியே அனுப்பியது.மன்னிப்பு கேட்டு ஒரு வாரத்திற்கு பின்பு இவ்வாறான முடிவினை எடுத்துள்ளது ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சரவணன் எவ்வாறு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார் என்பதற்கு புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியினை கொடுத்துள்ளது. கன்பெக்ஷன் அறையிலிருந்து இடதுபக்கமாக திறக்கப்படும் வாசல் வழியாக வரவேண்டும் என்று பிக்பாஸ் உத்தரவு போட்டது நாம் அறிந்ததே…
அதன் பின்பு என்ன நடந்தது என்பதை ஒரு புகைப்படம் வெளிக்காட்டியுள்ளது. குறித்த புகைப்படத்தில் தீவிரவாதிகளை அழைத்துச் செல்வது போன்று சரவணனை முகத்தில் கருப்பு துணி ஒன்றினை போட்டு அழைத்துச் செல்ல தயாராகிய புகைப்படமே இதுவாகும்.
