சரமாறியாக தாக்குதல் நடத்தப்பட்ட பிரபல சீரியல், சினிமா நடிகர்..! வீட்டுக்கு முன் நடந்த சம்பவம்..!

உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேப்போல் சீரியல்களும் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதிருக்கும் கொரோனா சூழ்நிலையில் சீரியல், சினிமா படப்பிடிப்புகள் நடத்துவது என்பது சாத்தியமற்ற கூறுகளாக அமைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் சினிமா பிரபலங்களும், ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாலிவுட் சின்னத்திரையில் பிரபலம நடிகர் அன்ஷ் பாக்ரி மீது மர்ம கும்பல் ஒன்று சரமாறி தாக்குதல் நடத்தியுள்ளது. டெல்லியில் உள்ள அவரின் வீட்டின் முன் நடந்த இந்த சம்பவத்தில் அன்ஷ்க்கு தலையில் பலமாக காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையில் அவர் புதிதாக வீடு ஒன்றை கட்டிவந்துள்ளார். இதற்காக அவர் காண்டிராக்டர் ஒருவரை வேலைக்கு நியமித்துள்ளார்.

ஆனால் அவர் வேலையை முடிக்காமல் இழுத்து வந்துள்ளார். இதனால் காண்டிராட்க்டருக்கும் அனிஷ்க்கும் இடையே வாக்குவாதம் நிலவியுள்ளது. எனவே அனிஷ் வேறொரு கட்டிட பொறியாளரை வைத்து வீட்டு வேலைகளை செய்துள்ளார். இதனால் கோபமான முந்தைய காண்டிராக்டர் அடியாட்களுடன் அனிஷ் வீட்டிற்கு வந்து அம்மா மற்றும் சகோதரியை மிரட்டியதோடு அனிஷை சரமாறியாக தாக்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.