சயீஷா போட்ட குத்தாட்டம் பார்த்து கிரங்கிப் போன ரசிகர்கள்… தெறிக்க விடும் லைக்ஸ்

வனமகன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாயிஷா. இவர் இப்படத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடியாக நடித்திருப்பார். இவர் நடித்த முதல் படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால் கோலிவுட்டில் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என பல ரசிகர்கள் இவரை எதிர்பார்த்தனர். தமிழ் சினிமாவில் சிறந்த நடிகை பட்டியலில் சயீஷாவிற்கென தனி இடமுண்டு.

இந்நிலையில் இவர் கடைக்குட்டிசிங்கம், காப்பான், கஜினிகாந்த் போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். அதற்குள் நடிகர் ஆர்யாவுடன் காதல் ஏற்பட்டு இருவரும் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். இது பல ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த போதும் திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இருப்பினும் இவருக்கு வாய்ப்புகள் குறைவாகவே வந்தவண்ணம் உள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் திரைப்பிரபலங்களில் சயீஷாவும் ஒருவர்.

லாக்டவுனுக்கு துவங்கிய நாளிலிருந்தே சயீஷாவின் நடனம் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. கேக் செய்வது, உடற்பயிற்சி போன்ற வீடியோக்களை வெளியிட்ட அவர், தற்போது நடுக்கடலில் கப்பலில் ஆடிய நடனத்தை வெளியிட்டார். சார்லி சாப்ளின் படத்தில் இடம்பெற்ற சின்ன மச்சான் பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். ரசிகர்களின் லைக்குகளை குவிக்கும் இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published.