சமைத்த எண்ணெயை மீண்டும் சமைக்கலாமா? இதோ அதற்கான பதில்..

கிட்டத்தட்ட நம் அனைவரின் வீட்டிலும் இருக்கும் ஒரு பழக்கம் சமைக்க உபயோகித்த எண்ணெயை மீண்டும் உபயோகிப்பது. இன்றும் நம்மில் இருக்கும் ஒரு கேள்வி ஒருமுறை உபயோகித்த எண்ணெயை மீண்டும் உபயோகிக்கலாமா என்பதுதான்? இதற்கான விடை என்னவெனில் உபயோகிக்க கூடாது என்பதுதான். ஏனெனில் இதனால் பல பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் ஒருமுறை உபயோகித்த எண்ணெயை மேலும் சிலமுறைகள் பயன்படுத்தலாம். ஆனால் அது எண்ணெய் மற்றும் சமைக்கப்படும் உணவை பொறுத்தது.

எந்த உணவாக இருந்தாலும் அதனை அதிகம் வறுக்கும்போது, அது உணவை சிதைவடைய செய்து அதில் உள்ள புரோட்டின்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சிதைக்கிறது, அதனால்தான் உணவு சிவந்து விடுகிறது. அதே எண்ணெயை மீண்டும் உபயோகிப்பது ஆர்தோகுளோரோசிஸ் என்னும் நோயை உண்டாக்குகிறது. உங்களுக்கு தெரியுமா? வீட்டில் உபயோகப்படுத்தும் எண்ணெய் கடைகளில் உபயோகப்படுத்தும் எண்ணெயை விட விரைவில் கெட்டுவிடும். இதற்கு காரணம் கடைகளில் செய்யப்படும் வெப்ப ஏற்பாடுகள் மற்றும் உபயோகிக்கும் பாத்திரங்கள்தான்.

உபயோகித்த எண்ணெயை நன்கு மூடிய பாத்திரத்தில் சேமிக்கவும். ஒருவேளை சேமிக்கப்பட்ட எண்ணெய் அடர் நிறத்திற்கோ, தடிமனாகவோ அல்லது வழவழப்பாகவோ மாறினால் அந்த எண்ணெயை மீண்டும் உபயோகப்படுத்தாதீர்கள். இந்த வழிமுறிகளை பின்பற்றாமல் உபயோகித்த எண்ணெயை மீண்டும் மீண்டும் உபயோகிப்பது பல ஆரோக்கிய கோளாறுகளை உண்டாக்கும். இந்த எண்ணெய்களில் வழக்கமான எண்ணெயை விட அதிகளவு கொழுப்பு இருக்கும். மேலும் இதில் உள்ள உணவுத்துகள்கள் எண்ணையை நச்சுத்தன்மை உள்ளதாக மாற்றிவிடும். இந்த எண்ணெயை உபயோகிக்கும்போது அது குடல் புற்றுநோய், உயர் கொழுப்பு அளவுகள் மற்றும் இதய கோளாறுகள் போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!