எத்தனை முறை விழுந்தாலும் தனது ரசிகனால் இன்று வரை கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் வெளியான தொட்டி ஜெயா, விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்கள் சிம்புவின் வெற்றியை ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது. லவ் ஆக்ஷன் ஹீரோவாக பார்க்கப்பட்டவர் சிம்பு. ஆனால் அவரின் நிஜ வாழ்க்கையில் லவ் செட்டாகவில்லை.
பல சிக்கல்களை தாண்டி வந்தாலும் தொடர்ந்து அவர் தன் கருத்தில் உறுதியாக இருக்கிறோர். இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இவர் நடிப்பில் கடைசியாக வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற திரைப்படம் வெளியானது. 90எம்எல், மஹா உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து மாநாடு திரைப்படத்தில் நடித்து வந்த நடிகர் சிம்பு பின் சில காரணங்களால், அப்படம் நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும் தற்போது இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் நடிகர் சிம்பு அதிகாரப்பூர்வமாக தன்னை சமூகவலைத்தளங்களில் இணைத்து கொள்ளவுள்ளார். மேலும் இது குறித்து வெளியான தகவலில் முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் யூடூப் உள்ளிட்ட சமூகவலைத்தளத்தில் வரும் 22ஆம் தேதி காலை 9.09-ல் இணையவுள்ளார்.
Arrival of #SilambarasanTR
in social media on Thursday
???? pic.twitter.com/u0oWUtMrpE— RIAZ K AHMED (@RIAZtheboss) October 20, 2020