சன் டிவியில் 200 முறைக்கு மேல் ஒளிப்பரப்பான பிரபல படம்! நன்றி தெரிவித்த இயக்குனர்..

உலகெங்கும் கொரோனா தாக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் பொது முடக்கம் போடாபட்டது. தற்போது நாடு முழுவதும் தளர்வுகள் விடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இதுவரை திறக்காமல் இருகிறது. மேலும் இந்த ஆண்டின் இறுதி வரை எந்த திரையரங்குக்கு தமிழ்நாட்டில் திறக்கப்படாது என்று கூறுகின்றனர்.

இதனால் தொலைக்காட்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து உள்ளது என்று கூறலாம். தியேட்டரில் வெளிவந்து சில நாட்களே ஆன புது படங்களை யார் முதலில் ஒளிபரப்புவது என்ற போட்டி டிவி சேனல்கள் மத்தியில் தற்போது அதிகரித்துவிட்டது. அதிலும் தல அஜித், தளபதி விஜய் ஆகியோரின் படங்கள் வார இறுதி நாட்கள், விசேஷ நாட்களில் ஒளிபரப்பி டிஆர்பியில் அதிக ரேட்டிங்ஸ் பெற்றுவிடுகிறார்கள்.

பிக்பாஸ் சேரன் இயக்கத்தில் வெளிவந்த பாண்டவர் பூமி படம் அண்மையில் 19 ம் ஆண்டு கொண்டாட்டத்தில் அடியெடுத்து வைத்தது இருக்கிறது. 75 நாட்கள் இப்படத்தில் ராஜ்கிரண், சந்திர சேகர், மனோரமா, அருண் விஜய், ரஞ்சித் என பலர் இப்படத்தில் நடித்து வெற்றிகரமாக ஓடிய படம். சன் டிவியில் இப்படம் 200 முறைக்கு மேல் ஒளிபரப்பட்டுள்ளது என நன்றி தெரிவித்துள்ளார் சேரன்.

 

Leave a Reply

Your email address will not be published.