சன் டிவியில் நல்ல நேரம் சொல்றவங்கள இவங்க..!! இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க…

ராசிபலன் கூறி அனைவரையும் கவர்ந்தவர் தான் விஜே விஷால். ராசி பலனில் இவர் நேரம் மற்றும் எந்த உடையை அணியுங்கள் என இவர் கூறுவதை ஞாபகம் இருக்கா. இவ்வாறு பிரபலமான இவர் தற்போது எங்கே இருக்கிறார் என்ன ஆனார் என ரசிகர்கள் ஏங்கி வந்த நிலையில் தற்போது இவரை பற்றிய சில தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் ஐடி வேலையை செய்து வருகிறாராம்.

இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பொழுது தன்னுடைய வேலையின் காரணமாக மூன்றாண்டுகள் நான் லண்டனில் தங்க வேண்டியிருந்தது. ஆனால் ஐடி கம்பெனி என்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது அதுமட்டுமில்லாமல் இதிலிருந்து நான் பல விஷயத்தை தெரிந்துகொண்டேன். மீடியா எதற்காகவும் யாருக்காகவும் வளைந்து கொடுக்காது என்னுடைய இதனால் என்னுடைய ஐடி வேலையை நான் விடக்கூடாது என்று முடிவு செய்தேன்.

ரசிகர்கள் பலர் என்னை பார்க்கும் போது என்னை பற்றி விசாரித்து தான் வருகிறார்கள். மேலும் தற்போது இவர் நாளிதழ்களில் சில ஆர்டிகல் தற்போது எழுதி உள்ளேன் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தற்போது மீண்டும் நான் லண்டனுக்கு செல்ல போகிறேன் எனவும் கூறியுள்ளார். அந்த வகையில் தற்போது லண்டனில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

Leave a Reply

Your email address will not be published.