சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிரபல சீரியல்களில் ஒன்று ரன். தொலைக்காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணா மற்றும் சாயா சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்தொடரில் விஜித என்பவர் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். இந்த சீரியல் ஒரு சினிமா தொனியுடன் தயாரிக்கப்படுகிறது, இது மற்ற வழக்கமான தமிழ் சீரியல்களிலிருந்து வேறுபடுகிறது. ஆரம்ப காட்சிகள் சில ஹாங்காங்கில் படமாக்கப்பட்டன. சில சென்னை, அலெப்பி மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் படமாக்கப்பட்டது.

விஜித் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கோயம்புத்தூரில் பிறந்த விஜித், தெற்கு திரையுலகின் வெள்ளித்திரைகளை ஈர்க்கும் ஒரு புதிய நடிகர் ஆவார். மேலும் அவர் சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றும் வைத்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டிலிருக்கும் விஜி தற்பொழுது தன் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வருகிறார்.
சொந்த ஊரில் வினோதினி என்ற பெண்ணை திருமணம் செய்து உள்ளார். இவர் திருமணம் குறித்த புகைப்படங்களை இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு பல ரன் சீரியல் குடும்பத்தினர் மற்றும் பல தரப்பினரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அழகிய திருமண ஜோடியின் புகைப்படங்கள் இதோ