சன் டிவியின் பிரபல சீரியல் திடீரென நிறுத்தம்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள் மற்றும் நடிகர் நடிகைகள்..!!

சன் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் அழகு. சீரியல்களுக்கு என்று பெயர் போன சேனல் என்றால் அது சன் டிவிதான். எத்தனை சேனல் போட்டிப்போட்டு சீரியல் எடுத்தாலும் சன் டிவி டிஆர்பி மற்ற சேனல்கள் நெருங்க முடியவில்லை. அந்த அளவிற்கு அங்கு சீரியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

இந்த சீரியல் நடிகை ரேவதி, தலைவாசல் விஜய் காயத்ரி ஜெயராமன், பூவிலங்கு மோகன், ராஜலஷ்மி, ஐஸ்வர்யா பாஸ்கரன், ஷாந்தி வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சீரியல் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதுகுறித்து அந்த சீரியலின் முக்கிய நாயகியாக நடிக்கும் நடிகை ஸ்ருதி ராஜ் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த சீரியலை தற்போது நிறுத்தி வைத்துள்ளனர் . ஏன் நிறுத்தி வைத்துள்ளார் என்று எனக்கு தெரியவில்லை . ஊரடங்கு காரணமாக என்னால் படப்பிடிப்புக்கு செல்ல முடியவில்லை, வருகிற 9ம் தேதியிலிருந்து படப்பிடிப்பு ஆரம்பிக்கும் என்று கூறிய நிலையில் இந்த சீரியல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!