மக்கள் செல்வன் என்று தமிழ் ரசிகர்களால் புகழப்பட்டவர் விஜய் சேதுபதி. இவரின் எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். லாக்டவுன் முடிந்தவுடன் இவரின் திரைப்படங்கள் வரிசையாக வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது. மேலும் தளபதி விஜய்யுடன் இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது விருமாண்டி என்பவறின் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து கணவர் பெயர் ரணசிங்கம் எனும் படத்தில் நடித்துள்ளார்கள்.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கொரோனா காரணமாக புதிய திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகியாகி வருகிறது. அந்த வகையில் நடிகர் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம், அதனைத்தொடர்ந்து அந்த வகையில் கடந்த வாரம் வெளியான க.பெ.ரணசிங்கம் திரைப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்றதோடு, இதுவரை ஓடிடி வெளியான திரைப்படங்களில் இப்படமே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் க.பெ.ரணசிங்கம் திரைப்படம் தமிழில் மட்டுமே வெளியாகியிருந்தது குறிப்படத்தக்கது. மேலும் தற்போது இப்படத்தை தெலுங்கு, ஹிந்தி,கன்னடம், மலையாளம் என 4 மொழிகளிலும் வெளியிடவுள்ளனர். வரும் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் ஜீ பிளக்ஸ்ல் 4 மொழிகளிலும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
After a massive success in Tamil, #KaPaeRanasingam will be releasing in #Hindi, #Telugu, #Malayalam & #Kannada on OCT 9th!
Watch the movie in your native language only on @ZeeplexOfficial at just 199/-? pic.twitter.com/s9qSbzFhOi— ZEEPLEX (@ZeeplexOfficial) October 7, 2020