மகாராஷ்டிராவில் கோவிலுக்கு வழிபட வரும் பக்தர்களை, நாய் ஒன்று கைகொடுத்து ஆசிர்வாதம் வழங்கிவரும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. பக்தி மனிதர்களுக்கு மட்டுமே உரியது என்பது நம்மில் பெரும்பாலானோர் மனதில் இருக்கும் விசயம். ஆனால் பக்திக்கு உயர் திணை, அஃறிணை பாகுபாடெல்லாம் கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒருசம்பவம் நடந்துள்ளது. இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில், அகமத்நகர் மாவட்டத்தில் சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஒரு நாய் ஒவ்வொரு நாளும் கோவிலின் வாசலில் அமர்ந்துகொண்டு, அங்கு வரும் பக்தர்களை கை கொடுத்து வரவேற்கிறது. அதேபோல், அதன் முன் தலைவணங்கும் பக்தர்களுக்கு தனது பாதங்களால் ஆசியும் வழங்குகிறது. அங்கு வரும் பக்தர்களும் அந்த நாயை கொஞ்சி தடவிக்கொடுத்துவிட்டு செல்கின்றனர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram