தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களிடையே நீங்க இடம் பிடித்தவர் நடிகர் ஷாம். தமிழ் சினிமாவில் ஷாம் 12 பி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், அதை தொடர்ந்து பல நல்ல படங்களை கொடுத்தவர். அதோடு இயற்கை, பொறம்போக்கு என்கிற பொதுவுடமை, உள்ளம் கேட்குமே போன்ற பல நல்ல படங்களில் நடித்தவர்.
அது மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலுன் ஒரு சில முன்னணி நடிகர்களின் படத்தில் செகண்ட் ஹீரோவாக தலையை காட்டினார். மேலும், தன் முகத்தை வருத்தி அவர் நடித்த 6 மெழுகுவத்திகள் படத்தை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை. 6 மெழுகுவத்திகள் படத்தில் இவரின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்ட ஒன்று. தற்போது கூட உள்ளம் கேட்குமே இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று ஷாம் முடிவு செய்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் நடிகர் ஷாம் திடீர் கைது என்று கூறப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வீட்டில் பணம் வைத்து சூதாடியதாக நடிகர் ஷாம் உள்பட 13பேர் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுதலை எனவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி இரவில் இவரை கைது செய்தது பலருக்கும் அதிர்ச்சி தான்.