செந்தில் கவுண்டமணி தொடங்கி தற்போது உள்ள சிறு நகைச்சுவை நடிகர்களில் வரை என்றுமே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகின்றனர். பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தன்னை முன்நிறுத்திக் கொண்ட யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் முக்கிய ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு என்று எப்போதுமே ஒரு தனி அங்கீகாரம் உள்ளது.

இவரது கால்ஷீட் கிடைக்க வேண்டும் என்று பல இயக்குனர்கள் காத்துக் கொண்டிருக்கும் அளவுக்கு இவர் புகழ் உயர்ந்து உள்ளது. யோகி பாபு ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தனுஷ், விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்கள் படத்தில் இவர் நகைச்சுவை நாயகனாக நடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார். யோகிபாபுவிற்கு சமீபத்தில் பார்வதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
யோகி பார்த்தாலே பலருக்கு சிரிப்பு வருவதாகக் கூறுவார்கள். ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் யோகி பாபு தனது பிறந்தநாளை தனது நண்பர் மற்றும் உறவினர்களோடு மிகவும் கோலாகலமாக கொண்டாடி உள்ளார். அது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் உலா வருகின்றது. இதோ அந்த வீடியோ..
. #yogibabu ‘s birthday celebration. #HByogibabu #YogibabuBirthday pic.twitter.com/T1i9sbOb0K
— Johnson PRO (@johnsoncinepro) July 22, 2020