பிரித்தானியாவில் வாழும் கோடீஸ்வரர்களான இந்திய வம்சாவளியினரான மருத்துவ பெற்றோருக்கு பிறந்த, படிப்பில் படு சுட்டியான ஒரு இளம்பெண் போதைப் பழக்கத்தால் பரிதாபமாக உயிரிழந்த செய்தி வெளியாகியுள்ளது.ஆண்டொன்றிற்கு 13,000
பவுண்டுகள் ஃபீஸ் உள்ள பள்ளியில் படித்த Birminghamஇல் வாழும் இளம்பெண் Poorvi Giri, (17). படிப்பில் படுசுட்டியான Poorvi, 10 முறை GCSE தேர்வுகளில் A கிரேடு பெற்றவள். ஒரு மில்லியன் மதிப்புடைய தனது வீட்டிற்கு அழைத்து வந்த 19 வயது இளைஞனுடன் பாலுறவு கொண்டபின் மயங்கிச் சரிந்தாள் Poorvi.பின்னர் சுயநினைவுக்கு வராமலே Poorvi உயிரிழந்த நிலையில் பொலிசார் அந்த 19 வயது இளைஞனை கைது செய்தனர்.
அவனை விசாரித்தபின், அவன் மீது வேறெந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாது எனக் கூறி அவனை பொலிசார் விடுவித்தனர்.பிரேதப் பரிசோதனையில் Poorviயின் இரத்தத்தில் போதைப்பொருள் அதிகமானதால் இதயம் பாதிக்கப்பட்டு அவள் இறந்தது தெரியவந்தது.
Poorvi பள்ளிக்கு வரும்போதும் பெரும்பாலும், குடித்து விட்டு அல்லது போதையுடனேயே வருவாள் என்று தெரிவித்துள்ள அவளது வகுப்புத் தோழி ஒருத்தி, அவள் மிக நன்றாக படிப்பதால் அவளை யாரும் எதுவும் சொல்வதில்லை என்றாள்.ஆனால் அதை மறுத்துள்ள Poorviயின் பெற்றோர், அவளை அமைதியாக உறங்கவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.