சினிமாவில் கிளாமர் பாடல்கள் என்று ஒன்று அக்காலமுதல் உள்ளன. அதற்க்கு டான்ஸ் ஆட தனியாக நடிகைகளும் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த 2013ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா ஷெட்டி, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் “அலெக்ஸ் பாண்டியன்”.

இந்த படத்தில் சந்தானத்தின் தங்கையாக காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நிகிதா துக்ரல், வயது 37. மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை மற்றும் மாடல். தமிழ் திரை உலகில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான “குறும்பு” என்ற படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார் நடிகை நிகிதா. சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்த நடிகை நிகிதாவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை. இதனால் கிளாமர் கதாபாத்திரங்களிலும், ஐட்டம் பாடல்களிலும் நடனம் ஆட ஆரம்பித்த நடிகை நிகிதா துக்ரல்.
தென்னிந்திய திரை உலகின் கிளாமர் ராணியாக வலம் வர ஆரம்பித்தார். “சரோஜா” படத்தில் “கோடான கோடி” பாடல் முதல் “பாயும் புலி” படத்தில் வரும் “நான் சூடான மோகினி” பாடல் வரை தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் பல படங்களில் கிளாமர் நடனம் ஆடி அசத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு கரன்தீப் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இப்போது, குடும்பம், நண்பர்கள் என தனது குடும்ப வாழ்கையை வாழ்ந்து வருகிறார் நிகிதா.