விஜய் டிவியில் பிரபலமான ராஜா ராணி என்ற சீரியலில் பிரபலமானவர் ஆல்யா மனசா. சீரியலில் நடித்து இருவருக்கும் ஏற்பட்ட கெமிஸ்டியால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஆலியா எந்த சீரியலும் நடிக்காமல் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். குடும்பம் சம்மதிக்காததால் இருவரும் திருமணம் செய்து பின்பு ஆல்யா கர்ப்பமான பின்பு அவரது குடும்பத்தினருடன் சேர்ந்தார்.

லாக்டவுனில் ஆலியாவிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தனது குழந்தைக்கு ஐலா என பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறந்த பிறகு நடிகை ஆலியா மிக விரைவில் அவரின் பழைய வாழ்க்கைக்கு திரும்பி விட்டார். சூட்டிங், நடிப்பு என்று கொரோனா காலத்திலும் ரொம்பவே பிசியாக உள்ளார். இப்போது ஆல்யா ராஜா ராணி 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடிக்கடி புகைப்படம் வெளியிடவும் மறப்பது இல்லை.
இந்த நிலையில் தனது படப்பிடிப்பின் இடைவேளையில் ஆல்யா குழந்தையுடன் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அவரும், அவரது குழந்தையும் ஒரே நிற ஆடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர், அந்த புகைப்படமும் தற்போது வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. குறித்த புகைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றது.