கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்தின் தற்போதைய நிலை தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜயகாந்த். இனிக்கும் இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் வைதேகி காத்திருந்தாள், புலன் விசாரணை, உண்மை விழிகள், சொக்கத் தங்கம் போன்ற பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவரின் 100 படம் கேப்டன் பிரபாகரன் படத்திற்கு பிறகு கேப்டன் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

நடிகர் விஜயகாந்த் தனது படங்களில் நாட்டுக்கு நல்ல செய்யும் கடமை வீரனாக பல படங்களில் நடித்துள்ளார். படங்களில் வருவது போல நிஜத்திலும் ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் நடிப்பில் இருந்து விலகி தே.மு.தி.கா கட்சியின் தலைமை தாங்கி வருகிறார். தான் ஒரு இடத்திற்கு வந்ததில் இருந்து அவர் செய்யாத உதவிகள் இல்லை. மற்ற மாநிலங்கள் புயல் போன்றவற்றில் பாதிக்கப்பட்டிருந்த போதும் யோசிக்காமல் உதவியிருந்தார்.

நடிகர் விஜயகாந்த் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று வந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் அவர் நோயில் இருந்து குணமடைந்துவிட்டார் என தகவல்கள் வெளியானது. ஆனால் விஜயகாந்திற்கு கொரோனா குணமடையவில்லை என்றும், அவரின் குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்தில் இருந்து வருகிறார்கள் என்றும் தற்போது தகவல்கள் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.