தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜயகாந்த். இனிக்கும் இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் வைதேகி காத்திருந்தாள், புலன் விசாரணை, உண்மை விழிகள், சொக்கத் தங்கம் போன்ற பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். கொண்டாடப்பட்டார். படங்களில் வருவது போல நிஜத்திலும் ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

தான் ஒரு இடத்திற்கு வந்ததில் இருந்து அவர் செய்யாத உதவிகள் இல்லை. மற்ற மாநிலங்கள் புயல் போன்றவற்றில் பாதிக்கப்பட்டிருந்த போதும் யோசிக்காமல் உதவியிருந்தார். தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கடந்த 22ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்ததால், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், விஜயகாந்த் மற்றும் அவருடைய மனைவி பிரேமலதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.