கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல ஹீரோயின்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..! தீயாய் பரவும் தகவல்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் நிக்கி கல்ராணி. தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவரே அறிவித்துள்ளார். இது குறித்து அவரின் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில், ”எனக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

நல்லவேளை எனக்கு லேசான அறிகுறிகள் தான் இருந்தது. முறையான வழிமுறைகளை கடைபிடித்து உடல் நலம் தேறிவருகிறேன். இந்த அசாதாரண சூழ்நிலையில் நாம் பாதுகாப்பாக இருப்பது முக்கியம். எனது வயது, உடல் ஆரோக்கியத்தால் என்னால் இதனை எதிர்கொள்ள முடியும். ஆனால், பெற்றோர், வயதானவர்கள் நிலை எனக்கு கவலையளித்தது. அதனால் தயவு செய்து மாஸ்க் அணிந்து வெளியில் செல்லுங்கள், சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்.

தயவு செய்து அவசிய தேவை தவிர மற்றவற்றிற்கு வெளியில் செல்வதை தவிருங்கள். வீட்டிலேயே இருப்பது கடினமான ஒன்று தான். இந்த கடினமான நேரத்தில் நாம் வீட்டிலேயே இருப்பது நமது கடமை. தொடர்ந்து ஆதரவளித்தமைக்கு சென்னை மாநகராட்சிக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published.