கொரானாவுக்கு பலியான முதல் தமிழ் திரையுலக பிரபலம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்..!

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்த் திரையுலகில் முன்னணித் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லட்சுமி மூவி மேக்கர்ஸ். கே.முரளிதரன், வி.சுவாமிநாதன் மற்றும் ஜி.வேணுகோபால் மூவரும் இணைந்து இந்தத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

இதில் சுவாமிநாதன் நடிகராகவும் உள்ளார். உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பகவதி, தாஸ், புதுக்கோட்டையில் இருந்து சரவணன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் லட்சுமி மூவி மேக்கர்ஸ் சார்பில் ப்ரியமுடன், உனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத் தேடி, பகவதி, அன்பே சிவம் போன்ற படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில் சுவாமிநாதனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். தமிழ்த் திரையுலகில் நிகழும் முதல் கொரோனா மரணம் இதுவாகும். இவருடைய மகன் அஸ்வின், பாஸ் (எ) பாஸ்கரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நிலையில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக தமிழ் திரையுலகில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மரணம் தற்போது தமிழ் திரையுலகினர் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published.