கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்… சோகத்தில் ரசிகர்கள்…

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சஞ்சய் தத். இவர் 1981 ஆம் ஆண்டில் பாக்ஸ் ஆபிஸ் சூப்பர் ஹிட் ராக்கி மூலம் தத் பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர் தத் 1982 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்தி திரைப்படமான விதாதாவில் நடித்தார், மேலும் இவருடன் திலீப் குமார், ஷம்மி கபூர் மற்றும் சஞ்சீவ் குமார் என பலர் நடித்தனர்.

1986 ஆம் ஆண்டு வெளியான நாம் திரைப்படம் தத்தின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, இப்படம் வணிகம் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றியை பெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சஞ்சய் தத் உடல்நல குறைவால் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறுகையில், நடிகர் சஞ்சய் தத் அவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என கூறப்பட்டது.

அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது, அவரின் பரிசோதனையின் முடிவுகள் நெகடிவ்-ஆக வந்துள்ளது. இதனையடுத்து மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு ஒரு இரண்டு நாட்களில் வீடு திரும்பினார். இது குறித்து அவரின் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். தற்போது அவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே கூறியுள்ளார். அதுவும் 3வது கட்டம், இதற்காக அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு செல்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published.