கை ரேகை இல்லாத பரம்பரை.. மொபைல் சிம் காட் இல்லை- வாக்களிக்க கூட முடியாமல் கஷ்டப்படும் குடும்பம்..

மனிதர்களின் விரலில் இருக்கும் கை ரேகை என்பது மிக முக்கியமான ஒன்று. எத்தனை கோடி மக்கள் இருந்தாலும், ஒருவர் கை ரேகை மற்றவர் கைரோகையோடு கடைசி வரை ஒத்துப் போவது இல்லை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு கை ரேகை இருக்கும். ஒரே குடும்பத்தை சார்ந்தவராக இருந்தாலும் ஒவ்வொருவரின் கை ரேகையும் மிகவும் வித்தியாசமாகவே அமையும்.

ஆனால் பங்களாதேஷில் வசித்து வரும் ஒரு குடும்பத்தில் உள்ள எவருக்கும் கை ரேகை இல்லை. இது ஒரு ஜெனடிக் குறை பாடு. கோடியில் ஒருவருக்கு தான் வரும். மனிதர்களின் கை ரேகை வைத்தே அணைத்து முக்கிய வேலைகளும் நடைப் பெறுகின்றது. ஏதேனும் திருடு போனால் கை ரேகை வைத்தே கண்டு பிடிக்க முடியும். ஆனால் இந்த குடும்பத்தில் பிறக்கும் எவருக்கு கை ரேகை இருப்பது இல்லை.

இதனால் இவர்கள் வாக்கு போட முடியாது என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் சொல்லப் போனால் பாஸ்போட் கூட இவர்களிடம் கிடையாது. சரியான ஐ.டி கார்ட் ஒன்று இல்லாத காரணத்தால் அவர்களுக்கு சிம் காட் கொடுக்க கூட எந்த ஒரு மொபைல் நிறுவனமும் முன்வரவில்லையாம். இப்படி ஒரு கஷ்டத்தில் இந்த குடும்பம் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.