கை, மணிக்கட்டு, விரல்களை வெட்டிய கொடூரம்..பின் தொடர்ந்த 2 பேர்! பொள்ளாச்சியில் மீண்டும் ஒரு இளம் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..!!

தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் பிரகதி என்ற மாணவி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. அதன் பின் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், அந்த பெண்ணிற்கு உறவினர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததாகவும், திருமண புடவை எடுப்பதற்காக மாணவி ஊருக்கு கிளம்பிய நிலையிலே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் கல்லூரியில் இருந்து வெளியே வந்த அவரை அடையாளம் தெரியாத இருவர் பின் தொடர்ந்து சென்றதாக அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர். இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பொலிசார் ஆய்வு நடத்தியுள்ளனர். சிசிடிவி கமெரா காட்சிகளின் அடிப்படையில் சதீஷ் என்ற இளைஞர் பொலிசாரிடம் சிக்கியுள்ளதாகவும்,

முக்கிய குற்றவாளி பிடிக்க போலீசார் திண்டுக்கல் விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்டு கிடந்த பிரகதியின் கை, மணிக்கட்டும் மற்றும் விரல்கள் ஆகியவை வெட்டப்பட்டு இருப்பது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இறந்த பிரகதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி மேலும் தகவல் பெற கீழேயுள்ள விடியோவை பாருங்கள்

Leave a Reply

Your email address will not be published.