ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவான நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார். இவர் தனக்கென ஆரம்பித்துள்ள யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றி வருகின்றார். இந்நிலையில் கைலாசாவின் 5 வகையான தங்க நாணயங்கள் விநாயகர் சதுர்த்திக்கு வெளியிடப்படும் என்று நித்தியானந்தா அறிவித்திருந்தார். அதற்கு தமிழில் பொற்காசுகள், ஆங்கிலத்தில் கைலாஷியன் டொலர், சமஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா, புஷ்ப முத்ரா எனவும் அதற்கு பெயர் வைத்தார். இந்து மதத்தை பின்பற்றும் 56 இந்து நாடுகளுடன் வர்த்தகம் செய்வோம் என கூறினார். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியான இன்று அறிவித்ததை போலவே கைலாஷியன் டொலர்களை வெளியிட்டார் நித்தியானந்தா. இந்த பொற்காசு 11.6638038 கிராம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
? Glimpses from Special Ganesh Chaturthi Satsang and Message with HDH Nithyananda Paramashivam 22 August 2020 Read the full post here: https://t.co/JbJ7o9KIll https://t.co/zeq577TDyy
— KAILASA’s Nithyananda (@SriNithyananda) August 22, 2020