கைலாசா நாடு செல்வதற்கு இந்த மூன்று ஊர்களுக்குத் தான் முன்னுரிமை! நித்யானந்தாவின் ஆஃபர்…

ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவான நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார். இவர் தனக்கென ஆரம்பித்துள்ள யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றி வருகின்றார். கைலாசா நாட்டை உருவாக்கி வருவதாக கூறிய நித்தியானந்தா, கைலாசாவுக்கென தனி ரிசர்வ் பேங்க், தங்கத்தில் அச்சடிக்கப்பட்ட 5 விதமான கரன்சிகள் என அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பை அண்மையில் வெளியிட்டிருந்தார்.

அதற்கு தமிழில் பொற்காசுகள், ஆங்கிலத்தில் கைலாஷியன் டொலர், சமஸ்கிருதத்தில் ஸ்வர்ண முத்ரா, புஷ்ப முத்ரா எனவும் அதற்கு பெயர் வைத்தார். கைலாசா நாட்டில் ஹோட்டல் வைப்பதற்கு அனுமதி கோரி, மதுரையை சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஒருவர் நித்தியானந்தாவிற்கு எழுதிய கடிதம் பற்றி நேரலையில் தோன்றி பேசிய நித்தியானந்தா, அவருக்கு அனுமதி உண்டு என்று கூறியிருந்தார்.

அத்துடன் கைலாசா நாட்டு பொருளாதார, வணிக செயல்பாடுகளில், மதுரை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அதிரடி சலுகையையும் நித்தியானந்தா அறிவித்துள்ளார். மேலும் திருவண்ணாமலை மலை அடிவாரத்தின் பல்வேறு பகுதிகளில், சிசிடிவி கேமிரா வைத்து தரிசனம் செய்து வருவதாகவும், ஆனால் அதே சமயம் அந்த சிசிடிவி சிக்னலை வைத்து கைலாசா நாட்டை கண்டுபிடிக்க முடியாது என்றும் சிரித்தபடி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.