கேப்டன் விஜயகாந்தைத் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரேமலதா!! வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜயகாந்த். இனிக்கும் இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் வைதேகி காத்திருந்தாள், புலன் விசாரணை, உண்மை விழிகள், சொக்கத் தங்கம் போன்ற பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். கொண்டாடப்பட்டார். படங்களில் வருவது போல நிஜத்திலும் ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறார். தான் ஒரு இடத்திற்கு வந்ததில் இருந்து அவர் செய்யாத உதவிகள் இல்லை. மற்ற மாநிலங்கள் புயல் போன்றவற்றில் பாதிக்கப்பட்டிருந்த போதும் யோசிக்காமல் உதவியிருந்தார்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துக்கு ஆகஸ்ட் 22ம் தேதி லேசான அறிகுறியுடனான கொரோனா பாதிப்பு இருந்தது. அதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பாதிப்பில் இருந்து விஜயகாந்த் குணமடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இன்று இரவு விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் இருக்க மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி விஜயகாந்த் வீட்டிலிருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பிரமேலதா விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!