கேட்டைத் திறந்ததும் சைலண்டாகவும், கேட்டை மூடியதும் வைலண்டாகவும் ச ண் டைபோடும் நாய்கள்.. இணையத்தில் வைரலாகும் காட்சி

நாய்கள் மிகவும் நன்றியுள்ளவை. தங்கள் எஜமானர்கள் மீது அன்பு வைப்பதில் நாய்களுக்கு இணையாக எந்த பிராணிகளையும் சொல்ல முடியாது. அதிலும் வீட்டில் வளர்க்கும் நாயைப் பார்த்தால் தெருநாய்கள் குரைப்பதும், ஒரு தெருவில் இருந்து அடுத்தத் தெருவுக்கு புதுவரவாக எதுவும் நாய் வந்துவிட்டால் அந்தத் தெருவில் இருக்கும் அனைத்து நாய்கள் சேர்ந்து குரைத்தே விரட்டுவதையும் பார்த்திருப்போம். இங்கேயும் அப்படிதான். ஒரு வீட்டின் இரும்பு கேட் பூட்டியிருக்கிறது. கேட்டின் உள்ளே இருந்து ஒரு நாயும், கேட்டுக்கு வெளியே இருந்து ஒரு நாயும் குரைத்துக் கொண்டு இருக்கின்றன. உடனே வீட்டின் உரிமையாளர் கேட்டைத் திறந்து விடுகிறார். கேட்டைத் திறந்ததும் ஒருவரை, ஒருவர் முகம் பார்த்துக்கொள்ளும் நாய்கள் சாந்தமாக இருக்கின்றன. மீண்டும் கேட்டை மூடியதும் இரண்டு நாய்களும் குரைக்கத் துவங்குகின்றன. இதோ நீங்களே வீடியொவில் பாருங்கள்..

 

Leave a Reply

Your email address will not be published.