நடிகர் நடிகைகள் சினிமாவை தாண்டி பல விதமான திறமை வாய்ந்தவர்களாக தான் இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமை படைத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் .சினிமாவை தாண்டி பிரபலங்களின் வாழ்க்கையில் சில, பல சர்ச்சைகள் இருப்பது வழக்கமே. இதனால் அவர்கள் சங்கடங்களை சந்திப்பதும் உண்டு. அவ்வகையில் தற்போது சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் பிரபல நடிகையான கல்கி கொச்லின். அண்மையில் வானொலியில் தாரா ஷர்மா நிகழ்ச்சியின் கலந்துகொண்டு பல விசயங்கள் பேசினார். மிகவும் ஓப்பனாக பேச வேண்டும் என்று நினைத்து வந்திருப்பார் போல நடிகை கல்கி.
இதில் அவர் சிறுவயதில் வகுப்பறையில் தான் மிகவும் சுட்டி, ஆசிரியர்களின் செல்லம், ஆசிரியர்கள் வெளியே சென்று விட்டால் கெட்ட ஜோக் சொல்லி சிறுவர்களின் கவனத்தை ஈர்த்து முத்தம் கொடுப்பாராம். பயங்கரமானவள் என வெளிப்படையாக கூறியுள்ளார்.