கூலிங் கிளாஸில், இளம் நடிகைகளை ஓரம் கட்டும் நடிகை ரம்யா கிருஷ்ணன்..! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

தமிழ் சினிமாவில் ‘வெள்ளை மனசு’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரம்யாகிருஷ்ணன். இதை தொடர்ந்து தமிழ் மொழி மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘படையப்பா’ படத்தில் நடித்த நீலாம்பரி கதாப்பாத்திரம் தற்போதும் யாராலும் மறக்க முடியாத ஒன்று. அதே போல் கமலஹாசனுடன் பஞ்சதந்திரம், மற்றும் சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார்.

இவர் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராஜமாதா ‘சிவகாமி தேவி’ கதாப்பாத்திரத்தில் நடித்த பாகுபலி திரைப்படம். பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில் பேசப்படும் நடிகையாக மாறினார் ரம்யா கிருஷ்ணன்.
சமீபத்தில் கூட சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், தேவ், வந்த ராஜாவா தான் வருவேன், மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்தியிருந்தார்.

மேலும் தற்போது ஐம்பது வயதை கடந்து விட்ட ரம்யா கிருஷ்ணன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் மிகவும் துணிச்சலான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர்… நீச்சல் குளத்தில், கூலிங் கிளாஸ் அணிந்தப டி வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த கிளிக்ஸ்…

Leave a Reply

Your email address will not be published.