குழந்தையிடம் தாய் போல அன்பு கட்டிய குரங்கு!! காண்போரை வியக்க வைத்த காட்சி- வைரல் வீடியோ

அன்பு என்றால் விலங்குகளிடம் மிக அதிகமாகவே காணப்படும். மனிதர் மனிதர்கள் மேல் வைத்திருக்கும் அன்பை விட விலங்கினங்கள் வைத்திருக்கும் பிரியத்துக்கு ஈடு இணையில்லை. ஏனென்றால் அதற்கு தெரியாது மனிதனின் ஆறாவது அறிவின் வியூகம் பற்றியெல்லாம். பொதுவாக குரங்குள் என்றாலே சேட்டை அதிகாமாக இருக்கும். குறித்த காணொளியில் குழந்தை ஒன்று ரோட்டில் விளையாடிக்கொண்டு உட்கார்ந்திருந்த போது, குரங்கு ஒன்று குழந்தையின் அருகே வந்து அன்பாக விளையாடி கட்டியணைத்து தலையில் பேன் பார்த்தது. மேலும் குழந்தையின் தாயார் குரங்கிடம் இருந்து குழந்தையை மீட்க வரும் போது, அந்த குரங்கு குழந்தையை கட்டியணைத்து குழந்தையின் தாயாரை தொடவிடாமல் தடுக்கிறது. இதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யத்தில் திகைத்துபோய் பார்த்துக்கொண்டிருந்தனர். அதை காணொளியாக ஒருவர் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.