தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் இளைய தளபதி விஜய். தற்பொழுது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்து வருகிறார். இயக்குனர் சந்திரசேகரின் மகன் என அடையாளத்தில் இருந்த விஜய் இப்போது, எஸ்.ஏ.சந்திரசேகருக்கே விஜயின் அப்பா என்னும் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார். உலக அளவில் இவருக்கு பல கோடி ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
இளையதளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். தமிழகத்தின் செல்லப்பிள்ளை என்றே அவரை சொல்லிவிடலாம். இளையதளபதி என அவரை ரசிகர்கள் உச்சிமுகர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இப்போது மாஸ்டர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். அந்தப்படத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கொரோனாவினால் அந்தப்படத்தின் வெளியீட்டுத்தேதி தள்ளிப்போகிறது.
இந்நிலையில் இளைய தளபதி விஜய் ஒரு குழந்தையை தூக்கி வைத்திருக்கும் படம் ஒன்று சோசியல் மீடியாக்களில் வைரலாகிவருகிறது. அது யார் தெரியுமா? கலர்ஸ் தமிழில் காதல் தொலைக்காட்சி சீரியலில் சஹானா கதாபாத்திரத்தில் நடிக்கும் புதுமுக நடிகை பிந்துதான் விஜய் கையில் இருக்கும் அந்தக்குழந்தை இது கலர்ஸ் மராத்தியில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த ஜிவ் ஜலா .ஏடா பிசா தொடரின் மறு ஆக்கம் ஆகும். நம்ம தளபதி மடியில் இருக்கும் பிந்துவின் படத்தை ஆச்சர்யத்தோடு பகிர்ந்து வருகின்றனர் ரசிகர்கள்.