குளத்திற்கு அருகே பாவமாக நின்ற நாய்.. உதவி செய்த மீன்! இணையத்தில் வைரலாகும் காட்சி

தனது உரிமையாளருடன் விளையாடிக் கொண்டிருந்த நாய்க்கு குளத்திலுள்ள மீன்கள் உதவி சம்பவம் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. நாய்கள் மிகவும் நன்றியுள்ளவை. தங்கள் எஜமானர்கள் மீது அன்பு வைப்பதில் நாய்களுக்கு இணையாக எந்த பிராணிகளையும் சொல்ல முடியாது. தனது உரிமையாளருடன் விளையாடிக் கொண்டிருந்த நாய், திடீரென பந்தை அருகிலுள்ள குளத்தில் தள்ளியது. இதனை அடுத்து குறித்த நாய் குளத்திற்கு அருகில் சென்று பந்தை எடுக்க முற்பட்ட நிலையில், குளத்திலுள்ள மீன்கள் பந்தை கரைக்குத் தள்ளின. எனவே கரைக்கு வந்த பந்தை நாய் இலகுவாக எடுத்துச் சென்று மீண்டும் விளையாடியது. இந்த சம்பவம் காணொளியாக பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.