குருபெயர்ச்சி பலன்கள்… இந்த ஆண்டில் ராஜ யோகம் எந்த ராசிக்கு தெரியுமா?

ஜோதிடத்தில் நம்முடைய ஜாதகத்தில் உள்ள வியாழன் கிரகத்தை குரு அல்லது பிரகஸ்பதி என்று அழைப்பார்கள். குரு என்னும் கிரகம் ஒவ்வொரு இராசியிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலை உடையது. வியாழன் கிரகமானது ஒருமுறை சூரியனைச் சுற்றி வர கிட்டதட்ட பன்னிரெண்டு வருடங்கள் ஆகும். ஆகையால் இக்கிரகம் ஒவ்வொரு இராசியில் ஏறத்தாழ ஒரு வருடம் வரைக்கும் சஞ்சரிக்கும். ஜோதிட சாஸ்திரப்படி, வியாழன் கிரகமானது எல்லோருக்கும் நிறைய அதிர்ஷ்டங்களைத் தரக்கூடியது. வியாழன் எந்த ராசியில் சஞ்சரிக்கிறதோ, அந்த இராசிக்காரர்களுக்கு நல்ல விஷயங்கள் அனைத்தும் கைகூடி வரும்.

குருப்பெயர்ச்சி
அதனால்தான், 2019 ஆம் ஆண்டிற்கான குருப்பெயர்ச்சி பலன்களை அறிந்துகொள்ள பெரும்பாலான மக்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். 2019 ஆண்டிற்கான குருப்பெயர்ச்சி மார்ச் 30- ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இம்முறை குருவானது தனுசு இராசிக்கு இடம்பெயர இருக்கிறது. குருவானது ஏப்ரல் 22ஆம் தேதி விருசிக்க ராசிக்கு இடம்பெயர்ந்து, நவம்பர் 5ஆம் தேதி மீண்டும் தனுசு இராசிக்கே இடம்பெயரவிருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் 12 இராசிக்குமான குருப்பெயர்ச்சி பலனை தற்போது காண்போம்.

மேஷம்
உங்கள் குடும்பத்தில் உள்ள யாருக்கேனும் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. சமுதாயத்தில் உங்களுக்கென தனி மரியாதை கிடைக்கும். உங்களுடைய இல்லற வாழ்க்கை மற்றும் தொழில் அனைத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். பிரபலமான கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்த வாய்ப்புள்ளது. பெற்றோர்களின் உறவுகளின் வழியே நல்ல செய்திகள் வந்து சேரும். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். உங்களுடைய உடல்நலத்தில் மட்டுமல்லாது, புதிய தொழிலில் பணம் முதலீடு செய்கிற போதும் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். உங்களுக்கான பொறுப்புகளைச் சரியாகப் புரிந்து கொண்டு நடப்பது நல்லது.

ரிஷபம்
உங்களுடைய தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வயிறு உபாதைகள் சம்பந்தப்பட்ட நோய்கள் வந்து போக வாய்ப்புள்ளது. பயணங்கள் மூலம் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். உணவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருங்கள். உங்களுக்குத் தேவையில்லாத வீண் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது தான் நல்லது. பயணங்களில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம். எந்த காரியமாக இருந்தாலும் அதை கொஞ்சம் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

மிதுனம்
இந்த குருப்பெயர்ச்சிக்குப் பிறகு, மிதுன இராசிக்காரர்களுக்கு எப்போதும் பணத் தட்டுப்பாடே ஏற்படாது. உங்களுடைய வாழ்க்கை கவலையின்றி மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுடனும் நண்பர்களுடனும் உற்றார் உறவினர்களுடனும் நல்ல ஆரோக்கியமான உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்களுடைய அணுசரணையான நடவடிக்கையால் அனைவரிடமும் நல்ல பெயர் வாங்குவீர்கள். இந்த குருப்பெயர்ச்சியில் இருந்து நீல நிற கற்களை அணிந்து வந்தால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். தொழிலில் லாபங்கள் தருகின்ற வகையில் கொஞ்சம் கவனமாக முதலீடு செய்வது நல்லது. வருங்காலத்தை திட்டமிடுவது அதற்கு ஏற்றபடி முயற்சி செய்வது நல்லது.

கடகம்
தொழிலில் உண்டாகும் பிரச்சினைகளால் உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் பிரச்சனைகள் தோன்றும். நீங்கள் எதிர்பார்த்துப் போலவே பண நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவர். நீங்கள் வெகுநாளாக காத்திருந்த வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. எதிரிகளிடம் கொஞ்சம் கவனம் தேவை. எதிரிகளின் மூலம் உங்களுக்கு தொந்தரவுகள் உண்டாகப் போகிறது. தொழில் கவனம் தேவை. கவனத்தை சரியான நிலையில் வைக்க யோகா போன்ற தியானப் பயிற்சிகள் செய்வது நல்லது.

சிம்மம்
இல்லற வாழ்க்கையில் கொஞ்சம் குதூகலமாக இருப்பீர்கள். உங்களுக்குத் தொழிலில் உதவக்கூடிய செல்வாக்கான நபர்களை சந்திக்கின்ற வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய தொழிலில் நல்ல முன்னேற்றமும் வளர்ச்சியும் உண்டாகும். தொழிலில் உங்களுக்கு முதலீடுகளுக்கு ஏற்ற நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக வாகனங்கள் வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கி வரும். மஞ்சள் நிற கல்லை நீங்கள் கைகளில் மோதிரமாக அணிந்தால் உங்களின் அதிர்ஷ்டம் கைகூடும். உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கன்னி
இந்த ஆண்டு குருப்பெயர்ச்சியால் உங்களுடைய வாழ்வில் பல்வேறு சங்கடங்கள் வந்து சேரும். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் சண்டைகள் வரலாம். தேவையில்லாத விவாதங்களைத் தவிர்த்திடுஞ்கள்.. நெருங்கிய நண்பர்கள் உங்களுடைய முதுகில் குத்துவார்கள். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ முடியாது. ஆன்மீக ஈடுபாடும் இறைப்பணியும் உங்களுக்கு சிறிது மன அமைதியை அளிக்கும். திருமண வாழ்க்கை சின்ன பாதிப்புக்குள்ளாகும். குடும்பத்துடன் உங்களுடைய நேரத்தையும் கொஞ்சம் செலவழியுங்கள். பணம் கொடுக்கல் வாங்கல் வாங்கலில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை.

துலாம்
இந்த ஆண்டு குருப்பெயர்ச்சியினால் உங்களுடைய வாழ்வில் நிறைய சங்கடங்கள் வந்து போகும். உங்களின் அலட்சியப் போக்குத் தொடரும். வீடு மாற்றம் செய்ய வாய்ப்புண்டு. கடின உழைப்பு மட்டுமே நற்பலனைத் தரும். கடவுள் பக்தி பாதகமான சூழலை சமாளிக்க வழிசெய்யும். யோகா போன்ற தியானப் பயிற்சிகள் செய்வது நல்லது.

விருச்சிகம்
இந்த குருப்பெயர்ச்சி உங்களளுக்கு பல நன்மைகளை தரவிருக்கிறது. பெரிய அளவில் பணவரவு ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சின்ன சின்ன பூசல்கள் தோன்றும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். எதிரிகளால் எந்தவிதப் பிரச்னையும் தோன்றாது. அதனால் அதைப்பற்றிய கவலை உங்களுக்குத் தேவையில்லை. வீட்டில் பூஜை போன்ற ஆன்மீக காரியங்கள் செய்து மன அமைதியை நாடுவீர்கள். கடினமாக வேலை செய்து, தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முயற்சி செய்வீர்கள். பண விஷயத்தில் கவனம் தேவை.

தனுசு
இந்த குருப்பெயர்ச்சிமாணவர்களுக்கு பல நன்மைகளை தரவிருக்கிறது. அவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவர். தனுசு இராசிக்காரர்கள் மகிழ்ச்சியான காதல், மற்றும் திருமண வாழ்வைப் பெறுவர். உங்கள் கருத்துக்களை மற்றவரிடம் சரியாக வெளிப்படுத்துவீர்கள். ஆனால் உங்கள் நெருக்கமானவர்களுடன் பிரச்சனைகள் ஏற்படும். பண பரிவர்த்தனை செய்வது நல்லதல்ல. பணரீதியாக பிரச்னை வர வாய்ப்புள்ளது. ஆகவே பண விஷயத்தில் கவனம் மிகவும் அவசியம். கடின உழைப்புத் தேவை.

மகரம்
இந்த குருப்பெயர்ச்சியால் உங்கள் திருமணவாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படும். நிலம் வாங்க வாய்ப்பு அதிகம். தொழில் மற்றும் வேலை சராசரியாக இருக்கும். பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும். கடவுளுக்கு செலவழிப்பதன் மூலம் நல்ல செய்திகள் வரும். கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த சிக்கல்கள் தீர்ந்து நெருக்கம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டு மிகச்சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பொதுநல காரியங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு மற்றவர்களின் ஆதரவும் பாராட்டும் கிடைக்கும். இந்த வருட குருப்பெயர்ச்சி உங்களுக்குச் சாதகமாகவே அமையும்.

கும்பம்
இந்த குருப்பெயர்ச்சியால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நல்ல மகிழ்ச்சியான திருமண வாழ்வு உங்களுக்கு காத்திருக்கிறது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தோன்றும். இதுவரை இருந்த சுவாசப் பிரச்சினைகள் கூட தீர்ந்து போகும். ஒளிமயமான எதிர்காலத்திற்கு ஏற்ற வாய்ப்புகள் தோன்றும். முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது கணவனோடு/மனைவியோடு கலந்தாலோயோசிப்பது நல்லது. குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். தொழில் மற்றும் குடும்ப வாழ்வை சரியாக கையாளுங்கள். புதிய முதலீடுகளுக்கு இது தகுந்த தருணம்.

மீனம்
இந்த குருப்பெயர்ச்சிக்குப் பின் உங்கள் குடும்ப வாஸ்வில் அமைதி நிலவும். குடும்ப எதிர்காலத்துக்கான திட்டம் தீட்டுவது நன்மை பயக்கும். வீடு இடமாற்ற வாய்ப்புள்ளது. அம்மாவின் உடல்நிலை சீராகும். உங்கள் உடல்நிலையில் கவனம் தேவை. தேவையில்லாத செலவுகளை குறைப்பது நல்லது. எனவே சிக்கனமாக இருங்கள். தொழிலில் புதிய முதலீடுகள் அதிலும் தெரியாத நபர்களிடம் செய்யாமல் இருந்தால் நஷ்டம் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published.