கும்கி பட நடிகை லட்சுமி மேனனா இது? வெளியான புகைப்படத்தை பார்த்து லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்..

கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இவருக்கு சுந்தரபாண்டியன் தான் முதல்படம். ஆனால் அதற்கு முன்பே கும்கி வந்துவிட்டது. சுந்தரபாண்டியனிலும் கோபக்கார பெண்ணாக அழகாக நடித்திருப்பார். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்த கும்கி படம் இவருக்கு வெற்றிகரமான படமாக அமைந்தது. பொதுவாக தமிழ் சினிமாவில் கொஞ்சம் குண்டாக இருக்கும் நாயகிகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு.

நடிகை குஷ்புவுக்கு கோயிலே கட்டியவர்கள் நம் திரைப்பிரியர்கள். அதேபோல் குண்டாக இருக்கும் ஜோதிகாவையும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடினர். அந்தவகையில் பார்க்கவே, கொழுக், மொழுக்கென்று இருந்த லட்சுமி மேனனுக்கும் தமிழில் ரசிகர்கள் அதிகம். கும்கி படத்தை தொடர்ந்து ஜிகிர்தண்டா, அஜித்தின் தங்கையாக வேதாளம் என பலபடங்களிலும் நல்ல நடிப்பைக் கொடுத்திருந்தார். ஒருகட்டத்தில் குண்டான உடல்வாகில் இருந்து மேலும் பெருத்துக்கொண்டே போக லெட்சுமி மேனனுக்கு படவாய்ப்புகள் குறைந்துபோனது.

இதனைத் தொடர்ந்து அம்மணி கடுமையாக ஒர்க் அவுட் செய்து தன் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்திருக்கிறார். இப்போது ஸ்கூல் பெண் போல் இருக்கும் அவரது புகைப்படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் எப்படி இருந்த லெட்சுமி மேனன் இப்படி ஆயிட்டாரே என லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!