குப்பை பொறுக்கி வாழ்ந்தவரின் வாழ்க்கையில் நடந்த அதிசயம்..! பத்து வருடத்திற்கு பிறகு மாறிய வாழ்க்கை பாதை!!

வாழ்க்கையில் எப்போது அதிசயம் நடக்கும் என்பது யாராலும் யூகிக்க முடியாது. அந்தவகையில் அப்படியொரு அதிசயம் சாலையில் சுற்றித் திரிந்த பிரேசில்வாசியின் வாழ்க்கையில் நடந்துள்ளது. பிரேசில் நாட்டில் சலூன்கடை வைத்திருப்பவர் அலெசாண்ட்ரா லோபோ. இவர் அந்தப்பகுதியில் குப்பை பொறுக்கி அதில் வந்த வருமானத்தை வைத்து வாழ்ந்துவந்த ஒருவரைப் பார்த்தார். முடியெல்லாம் அடர்த்தியாக வளர்ந்து, முடியே வெட்டாமல் வாழ்ந்துவந்த அவரிடம் சாப்பிட எதுவும் வேண்டுமா எனக் கேட்டார் ஆனால் அவர் அதை வேண்டாம் எனச் சொல்லவே, அவருக்கு ஏதாவது செய்யவேண்டும் என அவரது முடியை திருத்தி, தன் சலூன் கடையிலேயே அவரை பேஷனாக மாற்ற முடிவுசெய்தார்.

முடி திருத்தம் செய்த பின் அவரது அழுக்கு உடையை மாற்றிவிட்டு புத்தாடையும் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் முடிவெட்டும் முன்பு எடுத்த புகைப்படத்தையும், முடி வெட்டிய பின்பு எடுத்த படம் இரண்டையும் சேர்த்து சோசியல் மீடியா பக்கத்தில் போட்டார். அது வைரலானது. அந்தப்படம் சாலையோரம் குப்பை பொறுக்கி வாழ்ந்துவந்த குடும்பத்தின் வீட்டுக்கும் சென்றது.

கடந்த பத்துவருசத்துக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அவர், இறந்துவிட்டதாக குடும்பத்தினர் நினைத்துவந்த நிலையில் இந்தப் புகைப்படம் அவரது வீட்டினருக்கே பெரும் ஷாக்காக இருந்தது. உடனே அவருக்கு முடிவெட்டி பேஸ்புக்கில் புகைப்படம் போட்ட அலெசாண்ட்ரோ லோபோவை தொடர்பு கொண்டு, அவர் இருக்கும் இடத்தை அறிந்தனர். இதனால் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் குறிப்பிட்ட அந்த நபர் குடும்பத்தினரை சந்திக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.