குதிரை இல்ல, டைனோசரைக் கூட ஓட்டுவாங்க”.. அன்னப்பூரணி-யை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை..!

நடிகை ஷகிலா நடித்த 23 படங்களை தணிக்கை குழுவினர் வெளிவர விடாமல் முடக்கிவிட்டனர் என ஷகிலா வேதனையுடன் பல பேட்டிகளில் கூறியுள்ளார். நடிகை ஷகிலா 1990 முதல் 2000 வரை மலையாள பட உலகையே அசர வைத்தார் . இவர் நடித்த படங்களை பார்க்க தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும். அங்குள்ள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் படங்களை வசூலில் வீழ்த்தி ஷகிலா படங்கள் வசூல் வாரி இறைத்தன .

நடிகை சகிலா பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார் ஆரம்பத்தில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த ஜெயம் படத்தில் ஒரு சில காட்சிகள் அமைத்திருக்கும் ,சில நாட்களுக்கு முன் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் வெளிவந்த CWC என்னும் நிகழ்ச்சியின் மூலம் மிகுந்த வரவேற்பை பெற்றார் .தற்போது சாமி என்று ஆசாமியாக உள்ள அன்னபூரணி
காவல்துறையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் இவர் மக்களை ஏமாத்திவந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது .

ஏதோ ஒரு பவர் இருக்காம் கால்ல விழுந்ததும் குதிரைலாம் ஓட்டுராங்க. இந்த மாதிரி ஆளுங்கள மக்கள் நம்பற வரைக்கும் அந்த அம்மா குதிரை இல்ல, டைனோசர கூட ஓட்டுவாங்க. கடவுள் என்பது நம்முடைய மனசுக்குள்ள இருக்கார் அத மட்டும் நம்புங்க. அந்த அம்மாவுக்கு நரம்பு தளர்ச்சி போல, அதான் இப்படி ஆடுது போல என வெளுத்து வாங்கியுள்ளார்.