குட்டி தேவதையை அள்ளி அணைத்து கொஞ்சிய சினேகா-பிரசன்னா ஜோடி! வைரலாகும் போட்டோ ஷூட் வீடியோ..

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சினேகா. இவர் கடந்த 2012ம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அது மட்டும் இல்லாமல் பிரசன்னா மற்றும் சினோகா ஜோடி இருவரும் சேர்ந்து இன்றும் விளம்பர படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகின்றனர். சினேகா பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

 

திருமணத்திற்குப் பின்பு திரையுலகை விட்டு ஒதுங்கிய இவர் முதல் குழந்தை பிரசன்னா விஹான் பிறந்த பின், வேலைக்காரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். பின்னர் குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அதையடுத்து கடந்த ஜனவரி 24 ஆம் தேதி சினேகா-பிரசன்னா ஜோடிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது.

இப்படி ஒரு நிலையில் நடிகர் பிரசன்னா தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். குட்டி சினேகாவை கண்ட ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களை அள்ளி ரசிகர்கள் வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க தங்களது மகளுக்கு ஆத்யந்தா என்று பெயர் வைத்துள்ளதாக நடிகர் பிரசன்னா சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர்கள் நடத்திய போட்டோ ஷூட்டின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.